அதிரடி முடிவு

நேற்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இந்த தகவல் வெளியானதும், அலரி மாளிகையில் ஐதேக தலைவர்கள் அவசர அவசரமாக ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.
இன்று அதிகாலையிலும் கூட அலரி மாளிகையில் ஐதேக ஆதரவாளர்கள் பெருமளவில் ஒன்று கூடியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ், நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.
ஜனாதிபதி நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S