அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

நிலவும் மழையுடனான வானிலையால், அவதானத்துடன் செயற்படுமாறு தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுளளனர்.

தெற்கு அதிவேக வீதியின் கெலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையில் இன்று (06) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் நடவடிக்கை பிரிவுப் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக இருள் சூழ்ந்திருப்பதால் வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரச்செய்தவாறு பயணிக்குமாறும் சாரதிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sharing is caring!