அதி நவீன வசதியுடைய ஸ்கேனர் ஒன்றை வைத்திருந்த ஐந்து பேர் கைது

திருகோணமலையில் அதி நவீன வசதியுடைய ஸ்கேனர் ஒன்றை வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை திருகோணமலை முஸ்லிம் பாடசாலைக்கு அருகில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, வேனொன்றை சோதனையிட்ட பொலிஸார், அதி நவீன வசதியுடைய ஸ்கேனரை கைப்பற்றியுள்ளனர்.

நிலத்திற்கடியிலுள்ள பொருட்களை கண்டறியும் ஸ்கேனரை வைத்திருந்த ஐந்து சந்கேநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை,அநுராதபுரம், ஹதோகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring!