அத்துமீறி நுளைந்த ஆறு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்கள் பயணித்த படகையும் கைபற்றினார்கள்.

குறித்த மீனவர்களை இன்றைய தினம் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவர்களை யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!