அனுமதிப்பத்திரம் இன்றி 20 தங்கநாணயக் குற்றிகளை நாட்டிற்கு கொண்டுவந்த இந்திய வர்த்தகர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி 20 தங்கநாணயக் குற்றிகளை நாட்டிற்கு கொண்டுவந்த இந்திய வர்த்தகர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

8,80,000 பெறுமதியான தங்கநாணயங்கள் சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சுங்க உதவிப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 20 தங்கபிஸ்கட்களும் 160 கிராம் எடையுடையவை.

தனது பயணப்பொதியில் சூட்சுமமான முறையில் மறைத்துவைத்து அவற்றை சீனாவிற்கு கொண்டுசெல்ல சந்தேகநபர் முயற்சித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்க நாணயங்களை அரசுடமையாக்கி, சந்தேகநபரை விடுவிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Sharing is caring!