அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்

சர்வகட்சி கூட்டத்தின் பின்னர், இன்று (19) பாராளுமன்றத்தில் அமைதியாக செயற்பட்டமைக்காக அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின்போது, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவதற்காக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்தமை தொடர்பிலும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு இணங்க ஜனாதிபதியினால் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சிலர் குழப்பம் விளைவிக்கின்றமை தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!