அபகரிப்பு……..வலி வடக்கில் 227 ஏக்கர் காணி கையகப்படுத்த அரசு முடிவு

வலிகாமம் வடக்கில் 227 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அரசாங்கம் இரகசிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு காணி களைச் சுவீகரித்து கடற்படை முகாம்,

சுற்றுலாத்தளம் அமைப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகக்கு அக் காணிகளின் உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வர கிராம சேவகர் பகுதிகளை உள்ளடக் கியதாக 227 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னர் சீமெந்து தொழிற்சாலையும் பழைய வைத்தியசாலையும் இரு ந்த காணிகளை உள்ளடக்கியதாக 163 ஏக்கர் காணியும், நகுலேஸ்வரம் பிரதேசத்தில் 64 ஏக்கருமாகவே 227 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.

இதில் 163 ஏக்கர் காணியை முழுமையாக கடற்படையினருக்கும், 64 ஏக்கரில் இரண்டு ஏக்கர் காணியை மட்டும் கடற்படையினருக்கும் ஏனைய 62 ஏக்கர் காணியையும் சுற் றுலாத்துறை அமைச்சுக்குமாகவே சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் நகுலேஸ்வரத்திலுள்ள 64 ஏக்கர் காணிகளும் தனியாருக்குச் சொந்தமா னவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே போன்று காங்கேசன்துறை மத்தியில் சுவீகரிக்கப்படவுள்ள காணகளிலும்

தனியாருக்குச் சொந்தமான காணிகள் இருக்கின்றதாகவும் கூறப்படுகின்றது. இவ் வாறான நிலையிலையே அண்மையில் தெல்லிப்பழை பிரதேச செயலர் கொழும்பிற் கு அழைக்கப்பட்டு காணி சுவீகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டிருக்கின்றது.

மிக இரகசியமாக இக் காணி அபகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆ யினும் இக் காணிகளைச் சுவீகரிப்பதற்குரிய கடிதங்கள் இன்று அக் காணிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலையே

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு காணிகளை அரசாங்கம் சு வீகரிப்பதற்கு அக் காணிகளின் உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

அதே போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இவ்விடயம் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய வடக்கு ஆளுநர் மற்றும் பிரதமருடன் இது தொடர்பில் கலந்துரையாடி

காணி சுவீகரிக்கும் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ள தாகவும் தெரிய வருகின்றது. ஏனெனில் பொது மக்களின் காணிகளை அபகரிக்க வேண்டாமென்றும் அங்கு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற

நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் சுற்றுலாத்தளத்தை அமைக்க வேண்டாமென்றும் கோரியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக

தனியார் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதாக ஐனாதிபதி கூறியிருந்தும் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் தற்போது காணி சுவீகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!