அமரர் தி.இராசநாயகத்திற்கு பூநகரியில் சிலை அமைக்க வேண்டும்

பூநகரி மண்ணின் மைந்தனான கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் அமரர் தி.இராசநாயகத்திற்கு பூநகரியில் சிலை அமைக்க வேண்டும். பூநகரி பிரதே சபையின் பெரியார்களுக்கு சிலை வைத்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இப் பணியை மேற்கொள்ள வேண்டும் என சபையின் சுயேட்சை குழு உறுப்பினர் யோ. மேரி டென்சியா கோரிக்கை விடுத்துள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் அமர்வின் போது கருத்து தெரிவித்து அவர் இக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

அமரர் இராசநாயகம் அவர்கள் பூநகரியில் பிறந்து அரச சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு தனது மக்கள் பணிகளை மேற்கொண்டவர். பின்னாளில் கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளி்லும் தனது மக்கள் நலப் பணிகளை செவ்வனே செய்தவர். யுத்த காலத்தில் அவருடைய பணி மிகவும் போற்றுதலுக்குரியதாக இருந்தது.

அது மாத்திரமன்றி அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மகாதேவா சிறுவர் இல்லத்தில் ஆதரவற்ற ஆயிரக்கணக்கான சிறுவர்களை பாராமரிக்கும் மிகப் பெரிய பணியை ஆற்றியவர். எனவே அவர் கிளிநொச்சிக்கு செய்த இவ்வாறான அளப்பரிய மக்கள் பணிகளுக்காக அவருக்கு சிலை அமைப்பது பொருத்தமானது. எனவே பூநகரி பிரதேச சபை பூநகரியில் அவருக்கான சிலையினை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Sharing is caring!