அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நேற்று முன்­தி­னம் திடீ­ரென இர­க­சி­ய சந்திப்பு

இலங்­கை­யி­லி­ருந்து விடை­பெற்­றுச் செல்­ல­வுள்ள அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நேற்று முன்­தி­னம் திடீ­ரென இர­க­சி­ய­மா­கச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார்.

கொழும்­பில் உள்ள அமெ­ரிக்­கத் தூது­வ­ரின் இல்­லத்­தில் இந்­தச் சந்­திப்பு நடை­பெற்­றது.

சந்­திப்­பில், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்­பில் அமெ­ரிக்­கத் தூது­வ­ரி­டம் முத­ல­மைச்­சர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.அமெ­ரிக்கா மனித உரி­மை­கள் சபை­யி­லி­ருந்து வில­கி­னா­லும் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அழுத்­தம் கொடுக்­கும் என்று அமெ­ரிக்­கத் தூது­வர் அதற்­குப் பதி­லி­றுத்­துள்­ளார்.

அடுத்த ஆண்டு நடை­பெ­றும் அரச தலை­வர் தேர்­த­லில், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் வெற்றி வாய்ப்பு குறை­வா­கவே உள்­ள­தாக அமெ­ரிக்­கத் தூது­வர் இந்­தச் சந்­திப்­பின்­போது குறிப்­பிட்­டார் என்று கூறப்­பட்­டது. அவ­ருக்கு 30 சத­வீ­த­மா­னோரே ஆத­ரவு வழங்­கு­கின்­ற­னர் என்­றும் அவர் கணித்­தா­ராம்.

அரச தலை­வர் தேர்­தல்­க­ளின்­போது, சிறு­பான்மை இன மக்­க­ளின் வாக்­கு­கள் முதன்மை வேட்­பா­ளர்­க­ளுக்கு அவ­சி­ய­மா­னது என்­ப­தால் அந்­தச் சந்­தர்ப்­பத்­தைப் பயன்­ப­டுத்தி சிறு­பான்மை இன மக்­கள் மக்­கள் தமது பிரச்­சி­னை­யத் தீர்க்­க­வேண்­டும் என்று அமெ­ரிக்­கத் தூது­வர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, சிங்­கள மக்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­தும் வகை­யில் செயற்­பட்டு வரு­கின்­றார். இவ­ரும் மகிந்த அணி­யி­ன­ரைப் போன்று கருத்­துக்­க­ளைக் கூற முற்­ப­டு­கின்­றார்.

யதார்த்­த­பூர்­வ­மா­கச் செயற்­பட்­டால் நன்­மை­ப­யக்­கும். ஆனால் அவர் அவ்­வாறு செல்­லத் தயா­ராக இல்லை என்று அமெ­ரிக்­கத் தூது­வர் இந்­தச் சந்­திப்­பில் சுட்­டிக்­காட்­டி­னார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

Sharing is caring!