அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் சபாநாயகரை சந்தித்துள்ளார்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் (Alaina Teplitz) இன்று காலை சபாநாயகரை சந்தித்துள்ளார்.
நிலவும் அரசியல் நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தூதுவர், சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
தேர்தலினூடாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடமளித்து, இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களூடாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு இடமளிப்பது அவசியம் என குறித்த ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S