அமெரிக்கா இலங்கைக்கு விடுத்த எச்சரிக்கை
அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நவேர்ட் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது-
“அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் கோருகிறோம்.
நாடாளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமடைவது, இலங்கையை நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன், அதன் அனைத்துலக மதிப்பையும் பாதிக்கும்.
அத்துடன், நல்லாட்சி, உறுதித்தன்மை, பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்றும் அதில் கூறியுள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S