அமெரிக்க டொலரை சட்டவிரோதமாகக் கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூருக்கு ஒரு தொகை அமெரிக்க டொலரை சட்டவிரோதமாகக் கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

மினுவங்கொட மற்றும் பமுனுகம பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 35 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களின் பயணப் பொதிகளிலும் காற்சட்டைப் பைகளிலும் மிக சூட்சுமமான முறையில் மறைத்துவைத்து பணத்தை கொண்டுசெல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்த 36,11,140 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!