அமைச்சரவை நாளை பதவியேற்கும்

அமைச்சரவை நாளை பதவியேற்கும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது.

தேசிய அரசாங்கம் இன்மையால் அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் மாத்திரமே அங்கம் வகிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பிலும் கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்நிலையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் , நலின் பண்டார கருத்து தெரிவிக்கும் போது, ” தற்போது நாம் அரசாங்கத்தை அமைத்துள்ளோம். அடுத்ததாக அமைச்சரவையை நியமிப்போம். 30 பேருக்கும் கூடாத அமைச்சரவையையும், 40 பேருக்கும் கூடாத இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களையும் நியமிக்க நாம் முயற்சிக்கின்றோம். எனினும், ஏனைய கட்சிகளுடன் நாம் கலந்துரையாடி வருகின்றோம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எம்முடன் இணையப் போகின்றனரா என தற்போது எம்மிடம் சிலர் வினவுகின்றனர். அவ்வாறு இணைத்துக் கொள்வதாயின் மிகவும் நுணுக்கமாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, சிறந்தவர்களை மாத்திரமே இணைத்துக் கொள்வோம்.— என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!