அம்புலன்ஸ் வண்டியை வைத்து வடக்கில் கூத்தாட்டம்……?

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன்..

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியாலைகளில் கடந்த மூன்று மாதங்களில் 18 நோயாளர் காவு வண்டிகள் மத்திய அரசினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந் நோயாளர் காவு வண்டிகள் சேவையிலும் ஈடுப்பட்டு வந்துள்ளன. இதனால் குறித்த வண்டிகள் ஆயிரம் தொடக்கம் 4000 கிலோ மீற்றர்கள் வரை ஓடியிருக்கின்ற நிலையில்இன்று மீண்டும் விழா எடுத்து குறித்த வண்டிகளை இரண்டாவது தடவையாகவும் கையளித்த நிகழ்வு வடக்கு மாகாணத்தில் கைதடியில் இடம்பெற்றுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர் இவ் வண்டிகளை மாகாண மட்டத்தில் சிறு விழா ஒன்றினை நிகழ்த்திக் கையளிக்கும்படி கேட்டுக்கொண்டதாலேயே இன்றைய நிகழ்வு நடாத்தப்பட்டது என மாகாண சுகாதாரப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.இவ்வாறு ஏனைய மாகாணங்களுக்கும் நோயாளர் காவு வண்டிகள் கையளிக்கப்பட்டன. ஆனால் அங்கு எந்த மாகாணங்களிலும் இவ்வாறு மீள் கையளிப்பு நிகழ்வு இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மீள் கையளிப்பு நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றுமு் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Sharing is caring!