அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரத்­தில் அர­சி­யல் ரீதி­யி­லான தீர்­மா­னமே தேவை

அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரத்­தில் அர­சி­யல் ரீதி­யி­லான தீர்­மா­னமே தேவை என்று வலி­யு­றுத்­தி­யுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், அர­சி­யல் கைதி­கள் விட­யம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் கொழும்­பில் இன்று மாலை பேச்சு நடத்­த­வுள்­ளார்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டம், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் இன்று மாலை அரச தலை­வர் செய­ல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தக் கூட்­டம் முடி­வ­டைந்த பின்­னர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தனித்­துச் சந்­திப்­ப­தற்கு நேரம் கோரி­யுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ர­னும் சந்­திப்­பில் கலந்து கொள்­ள­வுள்­ளார்.

தண்­டனை வழங்­கப்­பட்ட 55 அர­சி­யல் கைதி­கள் தொடர்­பி­லும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே முடிவு எடுக்க முடி­யும். அத­ன­டிப்­ப­டை­யில் அவர்­களை மன்­னிப்­பில் விடு­விப்­பது தொடர்­பில் ஆரா­யப்­ப­டும்.

அர­சி­யல் கைதி­கள் தொடர்­பில், அர­சி­யல் ரீதி­யான தீர்­மா­னத்தை எடுத்து அவர்­களை விடு­விப்­பது தொடர்­பா­க­வும், அரச தலை­வ­ருக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் அழுத்­த­மாக எடுத்­து­ரைக்­க­வுள்­ளார்.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள், சட்­டமா அதி­பர் நேற்­றுத் தெரி­வித்த கருத்­துக்­களை ஏற்­றுக் கொள்ள மறுத்­துள்­ள­னர்.

Sharing is caring!