அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், அவ்வாறு தீர்மானம் எடுத்தால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Sharing is caring!