அரசாங்கம் செய்த முட்டாள் தனம்

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பிரச்சாரம் செய்வதற்கு தீர்மானம் எடுக்காமை இந்த அரசாங்கம் செய்த முட்டாள் தனமான நடவடிக்கை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மாத்தறையில் இன்று (28) தாதியர்களுக்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது . இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த அரசாங்கம் நாட்டில் மாற்றமொன்றை தோற்றுவித்துள்ளது. இந்த மாற்றத்தை பிரச்சாரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்காமையினால் மக்கள் மத்தியில் வரவேற்பில்லாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது.

இதனால், இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகள் கடந்த அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மக்களுக்காக நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், நிதி தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்காமையினால் மக்களிடம் அரசாங்கம் ஏச்சு வாங்கும் நிலை தோன்றியுள்ளது.

எதிர்வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்ய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பிரதமரிடம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!