அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பளையிலிருந்து அநுராதபுரம் நோக்கிய நடைபயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களது, அநுராதபுரம் நோக்கிய நடைபயணம் இன்று காலை பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்தின் இரண்டாம் நாள் பயணம் இன்று காலை பளை இயக்கச்சியிலிருந்து ஆரம்பமானது.

மாணவர்களுடன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் நடைபயணத்தில் இணைந்துள்ளனர்.

நடைபயணம் கிளிநொச்சியைச் சென்றடைந்ததும் மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் நடைபயணத்தில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக முன்றலில் இருந்து நேற்றுக் காலை மாணவர்கள் நடைபயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

Sharing is caring!