அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் பேரணி

அரசியல கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி, நாவலர் வீதியிலுள்ள ஐ.நா. இணைப்பு அலுவலகத்தை சென்றடைந்தது.

இதன்போது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை ஐ.நா. அலுவலகத்தில் கையளித்தனர்.

இதனையடுத்து, மாவட்ட செயலகம் வரை பேரணியாகச் சென்ற மாணவர்கள் அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

பின்னர், ஆளுநர் செயலகத்திற்கு சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் ஆளுநரிடமும் மகஜரொன்றைக் கையளித்தனர்.

Sharing is caring!