அரசியல் யாப்பு மாற்றத்தினை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு விருப்பமில்லை

அரசியல் யாப்பு மாற்றத்தினை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த, கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , அதன் காரணமாகவே 20ஆவது திருத்த சட்டமூலம் தனிநபர் பிரேரணையாகபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யும் 20ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி அரசியல் அமைப்புச் சபை உருவாக்கியுள்ள, அரசியல் அமைப்பு வரைபு தொடர்பிலான வழிநடத்தல் குழுவின் அங்கமாகும் எனவும் நாமல் எம்.பி தெரிவித்தார்.

“மக்கள் விடுலை முன்னணி வழிநடத்தல் குழுவின் அங்கமாக இருந்துகொண்டு 20ஆவது திருத்தத்தை முன்வைப்பது நகைப்புக்குரியது. யாப்பினை மாற்றியமைக்கவோ, இலங்கையரின் பிரச்சினைகளை குறிப்பாகத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கவோ அரசாங்கத்துக்கு விருப்பமில்லை.” எனவும் நாமல் எம்.பி நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!