அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் பொருத்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டார் ரணில்

தனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தனது ஊடகப் பிரிவின் வழி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு என்னை பொது வேட்பாளராக தெரிவு செய்த போது நான் எதிர்நோக்கி ஆபத்தான நிலைமை உங்களுக்கு நினைவில் இருக்கும் என நம்புகிறேன். நாட்டு அரசியலில் எந்த நபரும் பொறுப்பேற்காக சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.

அது பாரதூரமான அரசியல் சவால் என்பது போல் ஆபத்து நிறைந்தது. அரசியல் ரீதியாக மட்டுமல்ல? எனக்கு, எனது மனைவி, பிள்ளை என அனைவருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் அந்த சவாலை எதிர்கொண்டேன்.

அதேபோல் கடந்த 26ஆம் திகதி நான் எடுத்த தீர்மானம் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை விட மிகப் பெரிய சவாலுடனான தீர்மானம்.

உங்களதும், எனது அன்புக்குரிய தாய் நாட்டுக்காகவும் அன்பான பொது மக்களுக்காகவுமே இவை அனைத்தையும் நான் செய்தேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

எனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டார்.

இலங்கையின் எதிர்காலத்தை அவர் அவருடன் நெருக்கமாக செயற்படும், மக்களின் உண்மையான இதய துடிப்பை அறியாத மேல் தட்டு வகுப்பினர் வினோத களியாட்டு இடமாக மாற்றும் நிலைமைக்கு அவர் சென்றார்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ரணில் விக்ரமசிங்க அழித்தார் என்ற நான் நினைக்கின்றேன்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நான் தேர்தலில் வெற்றி பெற்று மறு நாள் மாலை நான் பதவியேற்கும் போது நாடாளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

எனினும் அந்த உன்னதமான நல்லாட்சி எண்ணக்கருவையும் நல்லாட்சியின் நோக்கத்தையும் ரணில் விக்ரமசிங்க அழித்தார். நாட்டில் ஊழல், மோசடிகள் பெருமளவில் அதிகரித்தன.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க கூட்டாக முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக தனியாக தீர்மானங்களை எடுத்தார்.

மிகவும் முரட்டுத்தனமாக ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்குள் நடந்துக்கொண்டார். இதனால், அரசாங்கத்திற்குள் பாரதுரமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

கூட்டாக முடிவுகளை எடுக்காது அவரும் அவருக்கு நெருக்கமான சிலரும் கலந்துரையாடி முடிவுகளை எடுத்தனர். இதன் காரணமாக நாடு என்ற வகையில் நாம் துரதிஷ்டவசமாக நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

கடந்த மூன்றரை வருடங்களில் எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டன. கொள்கை ரீதியான மோதல்களை நான் பார்த்தேன்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் எனது அரசியல் கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகளை கண்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் கலாசார வேறுபாடுகளை கண்டேன்.

இவை அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Sharing is caring!