அரச ஊழியர்களுக்கு தீர்வை வரியற்ற வாகன அனுமதி பத்திரம்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் வாகனங்களுக்கான இறக்குமதி அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படவில்லை எனவும் இறக்குமதி தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இரான் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

அந்நிய செலாவணியை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டு ரீதியான நடவடிக்கையே அதனை இரத்து செய்யக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இதற்கான தீர்வைப் பெறுவதன் மூலம் அனைவருக்கும் குறித்த அனுமதிப் பத்திரங்களின் ஊடாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என இரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

Sharing is caring!