அரச ஊழியர்கள் சம்பள மீளாய்வு…ஆணைக்குழு நியமனம்

அரச ஊழியர்களின் சம்பள மீளாய்வுக்காக எஸ். ரனுக்கேவின் தலைமையிலான 15 பேர் அடங்கிய விசேட ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் இன்று வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தினால் தமது திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பான ஆணைக்குழுவில் பொது நிர்வாகம், கல்வி மற்றும் சட்டத்துறை சார் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் அங்கம் வகிக்கின்றனர்.

Sharing is caring!