அரச கொள்முதல் நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும்

அரச கொள்முதல் நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுப்பதற்கு, விடயம் சார்ந்த அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

அண்மையில் அமைச்சுப் பொறுப்புகளுக்கான விடயப்பரப்புகள் மாற்றப்பட்டமைக்கமைய, தாமதம் இன்றி அரச கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.

Sharing is caring!