அரச சேவை பயிற்சிக்காக பட்டதாரிகள் இணைப்பு

அமைச்சரவை அனுமதிக்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி, அரச சேவைப் பயிற்சிகளின் நிமித்தம் 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அரச கொள்கைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள அனைத்துப் பட்டதாரிகளும் பல்கலைக்கழக உள்ளவாரிப் பட்டதாரிகள் என அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 15,000 பட்டதாரிகள் வருட நிறைவுக்குள் அரச சேவையில் பயிற்சிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உள்வாரிப் பட்டதாரிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கி அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்க கொள்கைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கை அமைச்சின் அதிகாரியொருவரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கமைய செயற்படுவதே தமது கடமை என குறிப்பிட்டார்.

Sharing is caring!