அரச நிறுவனங்களின் தலைவர்களாக முன்னாள் ஆளுநர்கள் நியமனம்

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க ஆகியோர் இரு அரச நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!