அரச வேலை வாய்ப்பு தேவையா…? சிங்களம் படியுங்கள்

எதிர்காலத்தில் அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமாயின் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற மொழிக்கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

”மொழிகளைக் கற்போம், மனதை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு முகத்துவாரத்திலுள்ள நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வடக்கு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Sharing is caring!