அறுவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

அறுவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புத்தளத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

புத்தளம் – கொழும்பு முகத்திடல் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மனித வள அபிவிருத்தி குழுவினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள் உள்ளிட்டோர் இதில்
பங்கேற்றுள்ளனர்.

தலையில் கறுப்பு பட்டி அணிந்தவாறு கழிவகற்றல் திட்டத்திற்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

புத்தளம் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்திற்கு தாம் முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கட்ஸ் –

Sharing is caring!