அலுக்கோசு பதவிக்கு விண்ணப்பித்த அமெரிக்கர்

அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்ற போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன்படி, அலுகோசு பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த பதவிக்கான 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு அமெரிக்கரின் விண்ணப்பமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 27மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இலங்கை குடிமக்கள் மட்டுமே, இந்த அலுகோசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதனாலேயே, அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!