அலுக்கோசு பதவிக்கு 2 பேர் தெரிவாகவுள்ளனர்

அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இந்த நேர்முகப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை உள்ளிட்ட 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அவற்றிலிருந்து 79 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 79 விண்ணப்பங்களில் இருவர் அலுகோசு பதவிக்காக தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!