ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டில் ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, 3 மணித்தியால வினாத்தாள்களுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர் அதனை வாசித்து தௌிவுபெறுவதற்கு மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளது.

Sharing is caring!