ஆசியாவின் ஆச்சரியம் விரைவில் திறக்கப்படவுள்ளது

கொழும்பு தாமரை கோபுர நிர்மானப் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிஜிடல் அடிப்படை வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுர பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தாமரை கோபுரத்தின் நிர்மானப் பணிகள் எதிர்வரும் சில வாரங்களில் முடிவடையவுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த கோபுரம் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.அத்துடன் விரைவில் திறந்து வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!