ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு முற்றாக தோல்வி

கல்வி நிர்வாக சேவையின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர் சேவைக்குட்பட்ட அதிகாரிகள் இன்று முன்னெடுத்த வேலைப்பகிஷ்கரிப்பு முழுமையாக தோல்வியடைந்திருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து பாடசாலைகளும் இன்று வழமைபோல் செயற்பட்ட அதேவேளை, அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாக சில இடங்களில் ஆசிரியர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே சமூகமளித்திருந்தனர். இருப்பினும் பாடசாலை மாணவர்களின் வருகை அல்லது ஆசிரியர்களின் வருகை குறைவாக காணப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டமையை காரணமாக கொண்டு இந்த தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!