ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் மலேசிய பொலிஸாரால் கைது

ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 இலங்கையர்களுடன் மலேசியாவூடாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 ஆண்களும் 8 பெண்களும் 4 சிறுவர்களும் இந்த 24 பேரில் அடங்குகின்றனர்.

ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்துவதற்காக படகொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புகடலிக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு அனுப்புவதற்காக மூன்று படகு இயந்திரங்களை கொள்வனவு செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

Sharing is caring!