ஆணைக் குழு முன்­பாக தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முத­லா­வ­தாக சாட்­சி­ய­ம­ளிக்­க­வேண்­டும்

போரின் இறுதி வாரங்­க­ளில் நடந்­தது தனக்­குத் தெரி­யும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருப்­ப­தால், உண்­மை­யைக் கண்­ட­றி­யும் ஆணைக் குழு முன்­பாக அவரே முத­லா­வ­தாக சாட்­சி­ய­ம­ளிக்­க­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

போரின் இறுதி இரண்டு வாரங்­க­ளி­லும் நடந்­தது தனக்­குத் தெரி­யும் என்­றும், அப்­போது முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி, முன்­னாள் அரச தலை­வர், முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் உள்­ளிட்ட யாரும் நாட்­டில் இருக்­க­வில்லை என்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்­கா­வில் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்.

இது தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் ஊட­கப் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் நேற்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் கேள்வி எழுப்­பப்­பட்­டது.
அவர் தெரி­வித்­த­தா­வது,

இறு­திப் போரின்­போது நடந்த விட­யங்­கள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­குத் தெரி­யும் என்­றால், நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­யின் உண்­மை­யைக் கண்­ட­றி­யும் குழு­வின் முன்­பாக அவர் முத­லில் சாட்­சி­ய­ம­ளிக்­க­வேண்­டும். போரின் இறு­திக் கட்­டங்­க­ளில் பன்­னாட்டு மனித உரி­மைச் சட்­டங்­கள், மனி­தா­பி­மா­னச் சட்­டங்­கள் இரு தரப்­பி­ன­ரா­லும் மீறப்­பட்­ட­தாக இரண்டு அறிக்­கை­கள் கூறு­கின்­றன. எனவே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, இறு­திப் போரில் நடந்­தவை பற்றி சாட்­சி­ய­ம­ளிக்­க­வேண்­டும் – என்­றார்.

வடக்­கில் வாள்­வெட்­டுக் குழுக்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த இரா­ணு­வத்­துக்கு மேல­திக அதி­கா­ரம் வேண்­டும் என்ற இரா­ணு­வத் தள­ப­தி­யின் கோரிக்­கைக்கு இணங்­கு­வ­தாக இரா­ஜாங்க அமைச்­சர் அஜித் பி பெரேரா தெரி­வித்த கருத்­துத் தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சட்­டம் ஒழுங்கு விவ­கா­ரத்­தில் தலை­யி­டு­வ­தற்கு எந்­த­வொரு சந்­தர்ப்­ப­மும் வழங்க முடி­யாது. மாகா­ணத்­துக்கு வழங்­கப்­பட்ட பொலிஸ் அதி­கா­ரம் பிர­யோ­கிக்­கக் கூடி­ய­தாக இருந்­தி­ருந்­தால் இந்­தச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்க முடி­யும் – என்­றார்.

Sharing is caring!