ஆதாரம் உண்டு….மிரேச்சத்தனமான போர் குற்றங்களை இராணுவம் செய்தது…..சரத் பொன்சேகா

இலங்கை இராணுவத்தின் சில அதிகாரிகள் மிலேச்சத்தனமான போர்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகா கூறியிருக்கின்றார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெள்ளைக்கொடி சம்பவத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும் தேவையான நேரத்தில் அவற்றை முன்வைக்க தயாராக இருப்பதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட சட்டவிரோதமான நடவடிக்கைகள் சம்பந்தமான காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்

Sharing is caring!