ஆம்… ஒத்துக் கொண்டார் ராஜபக்சே… ராணுவம் போர் குற்றம் செய்ததை!

இலங்கை:
ராணுவம் போர்குற்றங்களை செய்தது என்று ஒத்துக் கொண்டுள்ளார் ராஜ பக்சே.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் 70 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே மனிதாபிமான போரை ராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என தெரிவித்து வந்தார். இந்நிலையில் முதன்முறையாக இராணுவத்தினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, மகிந்த ராஜபக்சே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். தமிழர் பகுதி மீது நடத்தப்பட்ட போர் முடிவடைந்து 10 வருடங்கள் ஆன நிலையில், இராணுவத்தினரின் போர்க்குற்றங்களை முதல் முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த சமகால அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ராணுவத்தினரால் போர்குற்றம் நடந்தது என்பது உண்மை தான். அதேபோன்று விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. ராணுவத்தினருக்கு மாத்திரம் தண்டனை வழங்க முடியாது. விடுதலைப் புலிகளுக்கும் அவ்வாறான தண்டனை வழங்க வேண்டும் என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!