ஆயுதத்தினால் பாடசாலை மாணவனின் கையை துண்டாக வெட்டிய சம்பவம்

அட்டன் – யுனிபீல்ட் தோட்டத்தில் கூரிய ஆயுதத்தினால் பாடசாலை மாணவனின் கையை துண்டாக வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர் மற்றும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவர், டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேரதானை போதனா மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் வீட்டின் மீது இன்று காலை இனந்தெரியாதவர்கள் தாக்கி சேதம் ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!