ஆரம்ப சிறுவர்பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தின் : அறிக்கை

ஆரம்ப சிறுவர்பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தின் 2016 தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திரானி பண்டார தலைமையில் வெளியிடப்பட்டது.

பத்தரமுல்லையிலுள்ள வோட்டர் எட்ஜ் இல் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் சந்திரானி பண்டார குறிப்பிடுகையில் ,
இன்று உலக சனத்தொகை நாள். எதிர்கால சந்ததியை நல்லநிலையில் உருவாக்குவதற்கு சிறுவர் பராயம் முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையில் சுமார் 2000 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. இவை தற்போது முந்தைய வருடங்களுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் திட்ட பணிப்பாளர் டொக்டர் ரவி நாணயக்கார தெரிவிக்கையில்,
நீண்டகால யுத்தத்தின் பின் ஆரம்ப சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி நிலையங்கள் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ளது.

2010ஆம் ஆண்டு 12சதவீதமாக காணப்பட்ட இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் 2016இல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். இத்திட்டத்திற்கு உலகவங்கி மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் உதவியுள்ளது. தொடர்ந்தும் இந்த திட்டத்திற்கு இவை உதவிசெய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட அரசாங்க சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் 93.6 சதவீதமாக காணப்படுகின்றது. வடமாகாணத்தில் 92 சதவீதமாகவும் , வடமத்திய மாகாணத்தில் 93.1 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, துணைத்திட்ட பணிப்பாளர் விமல் லியனாராய்ச்சி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி .அசோகா அலவத்த , திட்டமுகாமைகயாளர் டொக்டர் நளின் தலகல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Sharing is caring!