ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பசில் ராஜபக்‌ஷவின் ஆதரவு கிடைக்கவில்லை

எதிரணியினர் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் ஆதரவு கிடைக்கவில்லையெனவும், சர்ச்சைக்குரிய பால் பக்கெட்டுக்களை அவருடைய ஆதரவு குழுவினர் விநியோகித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

பொலிஸார் இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாமல் ராஜபக்ஷ எம்.பி. தனது ஆதரவைப் பலப்படுத்துவதற்கு முன்னெடுத்த நடவடிக்கைக்கு பசில் ராஜபக்ஷ தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் நாட்டை விட்டும் வெளியேறிச் சென்றுள்ளார் எனவும் அவர் மேலும் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று (13) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Sharing is caring!