ஆர்ப்பாட்டம் நடாத்துவதில் மஹிந்த ராஜபக்ஷ கலாநிதிப் பட்டம் முடித்தவர்- டிலான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் நடாத்துவதில் கலாநிதிப் பட்டத்தை முடித்த அனுபவம் உள்ளவர் எனவும், அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாயின் விளைவு எப்படியிருக்கும் என்பதை ஜனாதிபதியும், அமைச்சர் மஹிந்த அமரவீரவும் மிகவும் நன்றாகவே அறிந்தவர்கள் எனவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பேரேரா தெரிவித்தார்.

பொலிஸாரைக் கொண்டு நாளை (05) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுக்க அரசாங்கம் முற்பட்டால் என்ன? செய்வீர்கள் என டிலான் பெரேரா எம்.பி.யிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே இதனைக் கூறினார்.

Sharing is caring!