ஆளுநர் என்ற பதவி ஜனாதிபதியினால் அகெளரவப்படுத்தப்பட்டுள்ளது

ஆளுநர் என்ற பதவி ஜனாதிபதியினால் அகெளரவப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருத்தமில்லாத ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ஆளுநர் பதவியை சொச்சைப்படுத்தியுள்ளார்.

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்  கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.

மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும் கெளரவமான பதவியாக மதிக்கப்படவேண்டியதொன்றாகும். அந்த நியமினங்கள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி சார்பற்ற கெளரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Sharing is caring!