ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இரண்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Sharing is caring!