“ஆவா” குழு தலைவர் சண்ணா வீட்டில் தாக்குதல்…

ஆவா குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவ ரும் தற்போது தலைமறைவாக உள்ளவருமான ச ண்ணா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து ஆவா குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

மானிப்பாய் கட்டப்பாழி லேனில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இன்று மாலை நடத்தப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த

3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பித்தது என்று பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மானிப்பாய் பகுதியல் உள்ள ஆவா குழுவின் தலை வருடைய வீட்டின் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் அங்குள்ள மறைகாணியில்(CCTV) பதிவாகியுள்ள வீடியோவில் அகப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவன் தலைவர் என பொலிஸாரினால் அ டையாளப்படுத்தப்படும் சண்ணா என்பவர் தற்போ து தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அவருடைய வீட்டின் மீது

வாள்வெட்டு கும்பல் ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த மோ ட்டார் சைக்கிள்களையும் அடித்து நொருக்கியது. இந்நிலையில்

தாக்குதல் இடம்பெற்ற வீட்டில் இருந்த மறைகாணி யில் தாக்குதல் நடாத்திய கும்பல் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் அகப்பட்டுள்ளனர்.

Sharing is caring!