ஆவா குழு முக்கியஸ்தரை சந்தித்த பிரதமர் ரணில்…?

ஆவா குழு தொடர்பாக தென்னிலங்கையிலும், யாழ்ப்பாணத்திலும் தொடர்ச்சியாக குரல் கொ டுத்தவரும் அருண் என்ற நபரை ஆவா குழுவின் முக்கியஸ்த்தார் என அடையாளப்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடக்கம், அமைச்சர் ராஜித வரையில் அனைவரும் சந்தித்து வருகி ன்றமை சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்த பிரதமர் மேற்படி அருண் என்ற நபரை தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சந்தித்திருக்கின்றார். அதேபோல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும், மேற்படி நபரை தாம் சந்தித்தாகவும் அவர் ஆவா குழுவின் முக்கியஸ்த்தர் எனவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சுதந்திரமாக இலங்கையில் திரிய விடப்பட்டுள்ள இந்த நபரும், ”ஆவாகுழுவும் உண்மையில் எவர்களால், அல்லது எதனால் உருவாக்கப்பட்டு வடக்கில் இயங்கவிடப்பட்டுள்ளன? எனவும்,  இன்றுவரை தமிழ்தேசிய கூட்டமைப்பு மௌனம் சாதித்து வருவது ஏன்? எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Sharing is caring!