இக்கட்டான நிலை….தமிழ் மக்கள் கேட்பதை பேசுவதா? அரசாங்கம் சொல்வதை செய்வதா?

தமிழ் மக்கள் கேட்பதை செய்வதா? அரசாங்கம் கூறுவதை செய்வதா? என்ற இக்கட் டான நிலைக்குள் தான் தள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியிருக்கின்றாா்.

இருதரப்பினருக்கும் இடையில் ஒரு பாலத்தை கட்டியெழுப்பும் ஒரு கடினமான பா தையில் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிகைள் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் பங்கேற்கும்

இலங்கை குழு நாளைய தினம் ஜெனிவாவிற்கு பயணமாகவுள்ளது. இந்த குழுவில், வெளிவகார அமைச்சர் திலக் மாரபன, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம,

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி மன்றாடியார்கள் நாயம் ஏ.நெரீன்புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர். இந்தநிலையில், ஜெனிவா பய ணிப்பதற்கு முன்பதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், குறித்த விடயங்களை தெரித்தா ர். ஜெனிவா விடயத்தில் தான் யாருடைய சந்தப்பத்தையும் பறித்துக்கொள்ளவில்லை என தெரிவித்த அவர்,

எனவே எவரும் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

Sharing is caring!