இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட சில வீரர்கள் மன்னார் சென்றிருந்தனர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட சில வீரர்கள் நேற்று (19), மன்னார் – பெரியமடு பகுதிக்குச் சென்றிருந்தனர்.

பெரியமடு பகுதியில் முன்னெடுக்கப்படும் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் மன்னார் – பெரியமடு பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட், ஜேம்ன்ஸ் டொரிஸ், கீட்டன் ஜென்னிங்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ, ஒலி ஸ்டோன் ஆகியோர் இந்தப் பணிகளை இன்று பார்வையிட்டனர்.

Sharing is caring!