இணையத்தளமூடாக கோரப்பட்ட விண்ணப்பங்களின் கால அவகாசம் நீடிப்பு

சுகாதார சேவையின் சில பயிற்சிகளுக்கு இணையத்தளமூடாக கோரப்பட்ட விண்ணப்பங்களின் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

நிறைவுகாண் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் பயிற்சிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Sharing is caring!