இதுவரையான காலப்பகுதிக்குள் 408 பேர் கொலை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 408 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 362 ஆகும்.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய 27 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40 துப்பாக்கிச்சூட்டுச் சம்பங்கள் பதிவாகியுள்ளதோடு, துப்பாக்கிப் பிரயோகத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரே பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச்ச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.

Sharing is caring!