இது வேலை செய்பவர்கள் உள்ள அரசு…ரணில் தெரிவிப்பு

”இது வேலைசெய்பவர்கள் உள்ள அரசாங்கம். தம்பட்டம் அடித்து ஆடி முடித்து வீட்டிற்குச் செல்பவர்கள் உள்ள அரசாங்கமல்ல. அதிகமாக பேச வேண்டியதில்லை.” என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், கேகாலை மாவட்ட பயனாளிகளுக்கு இன்று உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆயிரத்து 364 பேருக்கு இதன்போது காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

Sharing is caring!